Public News Tv - கொடுங்கையூர் அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் ஓபிஎஸ் பங்கேற்பு

PUBLISHED:05-Feb-2020

அதி.மு.க. பிரமுகர் மணல் ஜெ.ரவிச்சந்திரன் இல்ல திருமணம் விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பங்கேற்பு. 

அம்மா பேரவை பெரம்பூர் பகுதி முன்னாள் செயலாளரும் வட்ட அவைத்தலைவருமான மணல் ஜெ.ரவிச்சந்திரன் மகள் திருமண வரவேற்பு விழா 

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் உள்ள திருமண மண்டபத்தில்

அண்ணா திராவிட முன்னேற்ற கழக அவைத்தலைவர் இ.மதுசூதனன்,

வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளரும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் தலைவருமான ஆர்.எஸ். ராஜேஷ், ஆகியோரது தலைமையில் நடைபெற்றது. 

இதில் அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு ஆர்.சுகன்யா, எஸ்.பிரகாஷ் ஆகிய மணமக்களை வாழ்த்தினார். 

இவ்விழாவில் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், மாஃபா பாண்டியராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் விருகை வி.என்.ரவி, தி.நகர் சத்தியா உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் நா. பாலகங்கா, டி.ஜி.வெங்கடேஷ்பாபு,

மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பொதுகுழு உறுப்பினர்கள் மற்றும் ஜெ.கே.ரமேஷ், ஏ.கணேசன், டிஒய்கே.செந்தில், நாம்கோ கூட்டுறவு சங்க சேர்மன் வியாசை எம். இளங்கோவன், ஏ.டேவிட்ஞானசேகரன், மு.வெற்றிவேந்தன், இ.எஸ்.சதீஷ்பாபு, லயன். மா.வெங்கட்ராம், கே.எம்.கோபால், வீரமருது பாண்டியன்,  வி.கோபிநாத், இ.ராஜேந்திரன், கருப்பு இராஜேந்திரன், பா.இளங்கோவன், எம்.கண்ணா, கே.எஸ். அஸ்லாம், இ.வேலுமேஸ்திரி,

மற்றும் வட்ட செயலாளர்கள், ஆர்.கே.நகர், பெரம்பூர் பகுதி கழகத்தினர், மாவட்ட பிற அணி நிர்வாகிகள், மகளிரணியினர், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், உள்பட பலர் இருந்தனர்.




Recommended For You
Alert: You are not allowed to copy content or view source