Public News Tv - திமுக மன்றமா..? புறம்போக்கு நிலமா.? வண்ணாரப்பேட்டை பகுதியில் தாசில்தார் திடீர் ஆய்வு..!

PUBLISHED:03-Feb-2020

திமுக மன்றமா..? புறம்போக்கு நிலமா.? நில அளவையாளர்களுடன் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் தாசில்தார் திடீர் ஆய்வு..!

சென்னை இராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர் இரண்டாவது தெருவில் பழமை வாய்ந்த காலிமனை ஒன்று உள்ளது.

இந்த நிலத்திற்கு அப்பகுதி திமுக நிர்வாகிகள் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.

இந்த ஆண்டு மழை இல்லாத காரணத்தால் தண்ணீர் பஞ்சம்  வரக் கூடாது என்ற நோக்கத்தில் 

இந்த காலி மனை அருகே குடிநீர் தொட்டி அமைக்க அரசு மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர்.

திடீரென திமுகவினர் இந்த இடம் திமுக மன்றம் இருந்ததாக கூறி அரசு மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் சில நாட்களாகவே வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் பழைய வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தை  அணுகியுள்ளனர்.

இதற்கு காவல்நிலையத்தில் தங்களது தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடம்  முறையிட்டு உரிய ஆதாரத்துடன் வாருங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

எனவே அரசு மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் 

இராயபுரம் தொகுதி  சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான டி.ஜெயக்குமார் அவர்களிடம் முறையிட்டனர்.

இதன் விளைவாக அப்பகுதியில் அமைச்சர் டி.ஜெயகுமார்  நேரில் பார்வையிட்டு காலி மனையை பற்றி விசாரித்த பின்னர் 

அரசுக்கு சொந்தமான நிலமாக இருந்தால் இங்கு ரேஷன் கடை அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்து சென்றதாக கூறப்படுகிறது. 

மேலும் அதன் பின்னர் தாசில்தார் லட்சுமி அரசு அதிகாரிகளுடன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

இந்த மனையை பற்றி தீவிர விசாரணை செய்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று  தாசில்தாரும் அரசு அதிகாரிகளும் அப்பகுதி பெண்களிடம் வாய்மொழி அளித்து புறப்பட்டுச் சென்றார். 

தண்டையார்பேட்டை தாலுக்கா தாசில்தார் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் 

திமுக நிர்வாகிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில் உள்ளாட்சித் தேர்தல் வரும் நேரத்தில் இதுபோன்று திமுக நிர்வாகிகள் பொதுமக்களிடமும் சுய உதவிக்குழு பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது வாக்கு சதவீதத்தை குறைக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




Recommended For You
Alert: You are not allowed to copy content or view source