PUBLIC NEWS TV - மீட்பு பணிகளுக்கு 6 கோடி ரூபாய் வாகனங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

PUBLISHED:29-Jan-2020

சென்னை பெருநகர மாநகராட்சி உள்ள அம்மா அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 6 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாகனங்களை தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக மாநில பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் ரூ. 39.50 லட்சம் மதிப்பீட்டிலான டெலிஹாண்ட்லர் உபகரணம் மற்றும் 

மாநகராட்சி உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய்களில் கழிவுகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியினை மேற்கொள்ள ரூ. 5.20 கோடி மதிப்பீட்டிலான சக்ஷன் கம் ஜெட்டிங் வாகனம் 

இதைத்தொடர்ந்து சாலை மற்றும் தெருவோரங்களில் வசிக்கும் வீடற்றோர், முதியோர் மற்றும் மனநலம் குன்றியவர்களை மீட்டு காப்பகங்களில் சேர்க்க ஏதுவாக ரூ. 50 லட்சம் மதிப்பீட்டிலான நவீன குளிர்சாதன வசதியுடன் கூடிய 3 மீட்பு வாகனங்களை அம்மா மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடியசைத்து பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தபோது.




Recommended For You
Alert: You are not allowed to copy content or view source