PUBLIC NEWS TV - பொங்கல் பரிசு தொகுப்புடன் 1000 ரூபாய் ரொக்கம் அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

PUBLISHED:09-Jan-2020

பொங்கல் பரிசு தொகுப்பு ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் பொதுமக்களுக்கு  வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதுமுள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 

அதில் பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய், கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பும், ஆயிரம் ரூபாயும் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. 

பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து பரிசு தொகுப்பை பெற்று செல்கின்றனர்.

இன்று 9ம் தேதி துவங்கி வரும் 12ம் தேதிக்குள் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

12ம் தேதி வரை பரிசுத் தொகுப்பு கிடைக்கப்பெறாதவர்களுக்கு 13ம் தேதியும் வழங்கப்பட உள்ளது.

இதைத்தொடர்ந்து சென்னை இராயபுரத்தில் உள்ள  நியாய விலைக்கடைகளுக்கு நேரில் சென்று அமைச்சர் டி.ஜெயக்குமார் பரிசுத் தொகுப்புடன் 1000 ரூபாய் ரொக்கம்  ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் நாளொன்றுக்கு 300 பேர் வீதம் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட இருப்பதாகவும், காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை கடைகள் திறந்திருக்கும் எனவும் தெரிவித்தார்.

எனவே பொதுமக்கள் நெரிசலை தவிர்த்து, காலை 8 மணி முதல் மாலை 7 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வந்து பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

அருகில் பகுதி செயலாளர் ஏ.டி.அரசு , மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.எஸ்.கே.கோபால் , பா.சங்கர் உட்பட மாவட்ட பகுதி வட்ட நிர்வாகிகள் பலர்  உடனிருந்தனர்

பப்ளிக் நியூஸ் டிவி செய்தியாளர் எம்.கிருஷ்ணகுமார்




Recommended For You
Alert: You are not allowed to copy content or view source