PUBLIC NEWS TV - சினேக பாரதி சமூக சேவை அமைப்பு சார்பில் பாரதி விழா - இல.கணேசன் , முன்னாள் எம்எல்ஏ பங்கேற்பு

PUBLISHED:06-Jan-2020

சினேக பாரதி சமூக சேவை அமைப்பு சார்பில் பாரதி விழா - இல.கணேசன் , முன்னாள் எம்எல்ஏ பங்கேற்பு..! 

சென்னை திருவொற்றியூரில் சினேக பாரதி சமூக சேவை அமைப்பு சார்பில் பாரதி விழா நிறுவனர் பி.ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. 

கலைமாமணி பாரதி திருமகன் எத்தனை கோடி இன்பம் என்ற தலைப்பில் பாரதியாரின் புகழ் பற்றி சிறப்பு உரையாற்றினார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க. மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இல.கனேசன் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் ,  சி.பி.சி.எல். முதன்மை பொதுமேலாளர் எம்.சங்கர நாராயணன் ஆகியோர் பாரதியாரைப்பற்றி சிறப்புரையாற்றி திருக்குறள் புத்தகத்தை வழங்கினர்.

மேலும் இதில் அமைப்பு சார்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.




Recommended For You
Alert: You are not allowed to copy content or view source