PUBLIC NEWS TV - ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு ஆர்.கே நகரில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்..!

PUBLISHED:12-Dec-2019

ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு ஆர்.கே.நகரில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர் 

சென்னை ஆர்.கே.நகர் பகுதி 38வது  வட்டத்திலுள்ள வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் 

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி வட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதில் பகுதி செயலாளர் டி.எம்.பாலாஜி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு 100க்கும் மேற்பட்ட லட்டு , ஜாங்கிரி இனிப்புகளை வழங்கினார்.

அருகில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் , மகளிர் அணியினர் , ரசிகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பப்ளிக் நியூஸ் டிவி செய்தியாளர் எம்.கிருஷ்ணகுமார்




Recommended For You
Alert: You are not allowed to copy content or view source