PUBLIC NEWS TV - பெண்கள் பாலியல் பலாத்காரம் குறித்து - தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பா

PUBLISHED:05-Dec-2019

சென்னை:-

நாடெங்கும் பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் பாலியல் வன்கொடுமைகளை, தடுத்து நிறுத்திட வலியுறுத்தி, தமிழக மகிளா காங்கிரஸ் சார்பில், சென்னையில் ஜான்ஸி ராணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்‍கு பாதுகாப்பு இல்லை என வருத்தம் தெரிவித்த அவர்கள், தற்போது உள்ள சட்டங்களை முறையாகப் பயன்படுத்தி, பெண்கள் மீதான குற்றங்களை தடுத்து நிறுத்த முடியும் என்றனர்.

மேலும் பெண்கள் பாதுகாப்புக்காக மத்திய, மாநில அரசுகள் எவ்வித நடவடிக்‍கையும் எடுக்கவில்லை என, தமிழக மகிளா காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

போராட்டத்தின்போது, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்‍கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.




Recommended For You
Alert: You are not allowed to copy content or view source