PUBLIC NEWS TV - இலவச ஆவின் பால் பாக்கெட் உடன் - நோய் தீர்க்கும் நிலவேம்பு கசாயம்...!

PUBLISHED:22-Nov-2019

சென்னை திருவெற்றியூர் பகுதி 7வது வட்ட அதிமுக சார்பில்

சார்லஸ் நகர் கருமாரி அம்மன் கோயில் அருகில்  வசிக்கும் ஏழை எளிய பொதுமக்கள்

ஆயிரம் பேருக்கு நிலவேம்பு கசாயம் அரை லிட்டர் ஆவின் பால் பாக்கெட் ஆகியவற்றை கே.குப்பன் வழங்கினார்.

முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி  , ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் ஆணைக்கிணங்க 

திருவெற்றியூர் பகுதியில் வசிக்கும் ஏழை எளிய பொதுமக்களுக்கு மழை காலங்களில் ஏற்படும் தொற்று நோய்களான டெங்கு மலேரியா காலரா போன்ற விஷ காய்ச்சல் வராமல்  தடுக்கும் வகையில்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலவேம்பு கசாயம் மற்றும் அரை லிட்டர் ஆவின் பால் பாக்கெட் ஆகியவற்றை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் பொது மக்களுக்கு வழங்கினார்.

இதில் வரிசையில் நின்று பொதுமக்களும் பள்ளி மாணவ மாணவிகளும் நிலவேம்பு கசாயத்தை பருகி சென்றனர்

அருகில் வட்ட கழக செயலாளர் எம்.கண்ணன் , முருகன் , சார்லஸ் நகர் தலைவர் என்.ஜி.அருண் , ராஜேஷ் , அலெக்ஸ் , உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பப்ளிக் நியூஸ் டிவி செய்தியாளர் எம்.கிருஷ்ணகுமார்




Recommended For You
Alert: You are not allowed to copy content or view source