PUBLIC NEWS TV - மேயர் பதவிக்கு போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ கே.குப்பன் தனது விருப்ப மனுவை வழங்கினார்.

PUBLISHED:17-Nov-2019

மேயர் பதவிக்கு போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ கே.குப்பன் தனது விருப்ப மனுவை வழங்கினார்.

திருவள்ளூர்:

உள்ளாட்சித் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. 

இதையடுத்து அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு வழங்கப்படுகிறது.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை அளிக்க தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் குவிந்தனர்.

இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர்களான  கிழக்கு மாவட்ட செயலாளரும் , அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அலெக்சாண்டர் , ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெஞ்சமின் , முன்னாள் அமைச்சர்கள் மாதவரம் மூர்த்தி , அப்துல் ரஹீம் ஆகியோர் முன்னிலையில் 

திருவெற்றியூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  கே.குப்பன் சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பதவிக்கும் , 7வது வட்ட மாமன்ற உறுப்பினர் பதவிக்கும் போட்டியிட தனது விருப்பமனுவை வழங்கினார்.

அருகில் திருவொற்றியூர் நிர்வாகிகள் எம்.கண்ணன் , எஸ்.சங்கர் , எஸ்.மா.அரசு , இ.வேலாயுதம் , புதுகை மு.பாண்டியன் , டி.ஸ்டீபன் ராஜ் , எஸ்.பி.புகழேந்தி  ஆகியோர் உடனிருந்தனர்.

பப்ளிக் நியூஸ் டிவி செய்தியாளர் எம்.கிருஷ்ணகுமார்.




Recommended For You
Alert: You are not allowed to copy content or view source