PUBLIC NEWS TV - பள்ளி மாணவ மாணவிகள் 20 ஆயிரம் பேர் சுகாதார தூதுவர்கள் மூலம் - விழிப்புணர்வு பேரணியில் ஈடு

PUBLISHED:14-Nov-2019

சென்னை நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து சுகாதார தூதுவர்களாக நியமிக்கப்பட்ட மாணவியர்கள் கலந்துகொண்ட சுகாதார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதை கொடியசைத்து தொடங்கி வைத்து பின்னர் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி , ஒவ்வொரு பள்ளியிலும் 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் 

குழுக்கள் அமைக்கப்பட்டு, 20 ஆயிரம் பள்ளி மாணவ சுகாதார தூதுவர்கள் மூலம், காய்ச்சல் தடுப்பு, தொற்றுநோய் ஒழிப்பு உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிட்டார்.

நாட்டிலேயே பொது சுகாதார சேவைகள் வழங்குவதில், தமிழகம் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக திகழ்வதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் சிறந்த 3 மாணவ சுகாதார தூதுவர்களுக்கும்,

மாண்டிசோரி கல்வி பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டினார்.




Recommended For You
Alert: You are not allowed to copy content or view source