PUBLIC NEWS TV - இராயபுரம் சுரங்கப்பாதை மழைநீர் தேங்கி நிறுத்தி வைத்திருந்த பணி மீண்டும் தொடக்கம்…!

PUBLISHED:14-Nov-2019

இராயபுரம் சுரங்கப்பாதை மழைநீர் தேங்கி நிறுத்தி வைத்திருந்த பணி மீண்டும் தொடக்கம்…!

சென்னை இராயபுரம் பகுதி போஜராஜன் நகரில் இரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்றது. 

இந்த பணி தொடங்கிய நாள் முதல் மிகவும் மந்தமாக நடைபெற்று வந்தது 

சில மாதங்களுக்கு முன் சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் மிக மிக விரைவாக நடைபெற்று வந்தத நிலையில் 

கடந்த  மாதம் பணிகள் திடீரென நிறுத்தி கிடப்பில் போடப்பட்டது. 

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டுமான பணிகள் பருவ மழை காரணமாக மழைநீர் தேங்கி நீச்சல் குளம் போல் காட்சி அளித்தது 

இதைத்தொடர்ந்து சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றும் பணி விரைவு படுத்தி உள்ளனர்.

அப்பகுதி சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் அனைவரும் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை விரைவாக முடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

பப்ளிக் நியூஸ் டிவி செய்தியாளர் எம்.கிருஷ்ணா குமார்




Recommended For You
Alert: You are not allowed to copy content or view source