திருவொற்றியூர் 7வது வார்டு அதிமுக வேட்பாளர் கே.கார்த்திக் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.!

PUBLISHED:08-Feb-2022

திருவொற்றியூர் 7வது வார்டு அதிமுக வேட்பாளர் கே.கார்த்திக் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

சென்னை திருவொற்றியூர் 7வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.கார்த்திக்  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட 7வது வார்டில் உள்ள ராஜாஜி நகரில் அதிமுக வேட்பாளர் கே.கார்த்திக் வீதி, வீதியாகவும், வீடு, வீடாகவும், நடந்து சென்று பொதுமக்களிடமும் , வியாபாரிகளிடமும் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

அப்போது அங்கிருந்த டீக்கடையில் அமர்ந்து டீ குடித்து திண்ணை பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இதில் வட்ட செயலாளர் M.கண்ணன் , அதிமுக நிர்வாகிகள் நரேந்திரன் ,  முருகன் , கோபி , சுகன் , ராஜேஷ் உட்பட அதிமுக நிர்வாகிகள் , மகளிர் அணியினர் என பலர் இருந்தனர்.
Recommended For You
Alert: You are not allowed to copy content or view source