மணலி 21வது வார்டு திமுக வேட்பாளர் V.முத்துசாமி உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு

PUBLISHED:08-Feb-2022

மணலி 21வது வார்டு திமுக வேட்பாளர் வ.முத்துசாமி உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர  வாக்கு சேகரிப்பு..!

பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருவொற்றியூர் 21வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் வ.முத்துசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சென்னை திருவொற்றியூர் தொகுதிக்கு உட்பட்ட 21வது வார்டில் உள்ள சீனிவாசன் தெருவில் திமுக வேட்பாளர் வ.முத்துசாமி வீதி, வீதியாகவும், வீடு, வீடாகவும், நடந்து சென்று பொதுமக்களிடமும் , வியாபாரிகளிடமும் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிக்குழுவினர் என பலர் கலந்து கொண்டனர்.




Recommended For You
Alert: You are not allowed to copy content or view source