இராயபுரம் 48வது வார்டு திமுக வேட்பாளர் V.விஜயலட்சுமி உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு

PUBLISHED:07-Feb-2022

இராயபுரம் 48வது வார்டு திமுக வேட்பாளர் V.விஜயலட்சுமி உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர  வாக்கு சேகரிப்பு..!

பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இராயபுரம் 48வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் V.விஜயலட்சுமி - விஜயகுமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சென்னை இராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட 48வது வார்டில் உள்ள மிண்ட் சுப்பராயலு தெரு , சண்முகராயன் தெரு , ஆரணி ரங்கன் தெரு உள்ளிட்ட பகுதியில் திமுக வேட்பாளர் V.விஜயலட்சுமி - விஜயகுமார் வீதி, வீதியாகவும், வீடு, வீடாகவும், நடந்து சென்று பொதுமக்களிடமும் , வியாபாரிகளிடமும் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

இதன் முன்னதாக மிண்ட் சுப்பராயலு தெருவில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது. 

இதில் மாவட்ட செயலாளர் தா.இளைய அருணா கலந்து கொண்டு தேர்தல் பணிமனையை திறந்து வைத்து, தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ரெயின்போ N.விஜயகுமார் , பகுதி செயலாளர் வ.பெ.சுரேஷ் , வட்ட செயலாளர் இரா.பாலன் உட்பட ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Recommended For You
Alert: You are not allowed to copy content or view source