தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலையொட்டி சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ தலைமையில் கடந்த 8ம் தேதி விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது.
இந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் மாநகராட்சிக்கு உட்பட்ட பொது பெண்கள் வார்டுகளை பொது வார்டாக மாற்றி இடஒதுக்கீடு செய்து அறிவித்ததை அடுத்து மாதவரம் தொகுதிக்குட்பட்ட 19வது பொது வார்டில் போட்டியிடுவதற்காக மாவட்ட பிரதிநிதியும், முன்னாள் மாத்தூர் ஊராட்சி மன்ற துணை தலைவருமான ஆர்.பாபு தனது விருப்ப மனுவை பகுதி செயலாளர் G.துக்காராம் அவர்களிடம் வழங்கினார்.
அருகில் மாவட்ட துணை செயலாளர் T.ராமகிருஷ்ணன் , 19வது வட்ட செயலாளர் மாத்தூர் தாமரை செல்வன் உட்பட பலர் உடனிருந்தனர்.