திருவொற்றியூர் 3வது வட்ட அதிமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

PUBLISHED:18-Jan-2022

அஇஅதிமுக நிறுவன தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 105வது பிறந்தநாளையொட்டி சென்னை திருவொற்றியூர் பர்மா நகரில் 3வது வடக்கு  வட்ட செயலாளர் C.பாலமுருகன் , S.கோபாலகிருஷ்ணன்,  A.மணிமாறன் ஆகியோர் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திருவொற்றியூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு பகுதி செயலாளருமான K.குப்பன் கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றி எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

அருகில் அதிமுக நிர்வாகிகள் B.செல்வம் , M.P.மகாராஜன், K.மணிவண்ணன், கோபி, K.காளீஸ்வரி, டேவிட் ராஜன், சோலைமுத்து, S.B.புகழேந்தி, P.T.விஜய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Recommended For You
Alert: You are not allowed to copy content or view source