PUBLIC NEWS TV - சென்னையில் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு.

PUBLISHED:11-Aug-2020

சென்னை இராயப்பேட்டை பகுதியை சேர்ந்த பாஷா ( 40 ) என்பர் C - 2 யானைகவுனி காவல் நிலையத்தில் கீழே கண்டெடுத்த பையில் நகைகள் இருப்பதாக கூறி ஒப்படைத்தார் .

இதையடுத்து போலீசார் விசாரணையில் சவுகார் பேட்டையை சேர்ந்த நகை தொழிலாளி பியூஸ் ( 22 ) தனது இருசக்கர வாகனத்தில் செல்லும்போது 4 கிலோ வெள்ளி நகைகளை தவற விட்டு சென்றது தெரியவந்தது.

அவரிடம் போலிசார் உரிய விசாரணை நடத்தி 4 லட்சம் ரூபாய் நகைகளை ஒப்படைத்தனர்.




Recommended For You
Alert: You are not allowed to copy content or view source