திருவெற்றியூர் ஆகாஷ் மருத்துவமனையில்
கொரோனா சடலத்தை வைத்துக்கொண்டு பேரம்
சென்னை புது வண்ணாரப்பேட்டை மேஸ்திரி தெருவை சேர்ந்த அன்பழகன் என்பவர் கடந்த ஐந்து நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டு
திருவெற்றியூர் பகுதியில் உள்ள ஆகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நடைபெற்று வந்தார்.
இதனிடையே நோயாளிக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் நோயாளியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரை எப்படியும் நாங்கள் காப்பாற்றி விடுவோம் என உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
மருத்துவ நிர்வாகத்துக்கு முன் பணமாக ரூபாய் 1 லட்சமும்
மருத்துவ சிகிச்சைக்கு மேலும் 2.50 லட்சம் பணம் செலுத்த வேண்டும் என கூறியதும் கடன் பட்டு பணத்தை கட்டினர் உறவினர்கள்.
இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் கொரோனா வைரஸ் தொற்று பரவிய நோயாளி அன்பழகன் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டதாக ஆகாஷ் மருத்துவமனை நிர்வாகத்தினர் இறந்தவரின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை ரூபாய் 7.50 லட்சத்திற்க்கான மொத்த பில் தொகையுடன் 3.50 கட்டியது போக மீதி பில் தொகையானது 4 லட்சத்தை கட்டினால் இறந்தவரின் சடலத்தை ஒப்படைப்போம் என திருவெற்றியூர் ஆகாஷ் மருத்துவமனை திடீர் நெருக்கடியாக தொல்லையை கொடுத்ததும் அதிர்ந்தனர் இறந்த நோயாளியின் குடும்பத்தினர்.
இறந்த அன்பழகனின் குடும்பத்தினர்
மருத்துவ சிகிச்சைக்கு
3 1/2 லட்சம் வரை செலவு செய்தும் நோயாளி உயிர் பிழைக்காததால் உறவினர்கள் வேதனை அடைந்தனர்.
இந்நிலையில் கொரோனா சடலத்தை வைத்து அதிக பில் தொகை கேட்டு உறவினர்களை மிரட்டியது ஆகாஷ் மருத்துவமனை நிர்வாகத்தால் வாக்கு வாதம் ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது
தமிழக அரசு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு கட்டண வழிகாட்டுதல் நெறிமுறைகள் அறிவிப்பு வெளியிட்டும் மருத்துவ காப்பீட்டு அட்டையுடன் கூடுதல் கட்டணம் வசூலிக்க படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதை அடுத்து அம் மருத்துவமனை மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது தற்போது கேள்வி எழுப்பியுள்ளார் பொதுமக்கள்.
மரணமடைந்த கொரோனா நோயாளியின் உறவினர்
9840411704 , 99403 59605 தொடர்புக்கு