சென்னை திருவொற்றியூர் 1வது மண்டல அலுவலகத்தில் கொரோனா தடுப்பு களப்பணியாளர்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
நிகழ்ச்சியில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் களப்பணியில் ஈடுபடும் நீங்கள் கையுறை , முக கவசம் அணிந்து பாதுகாப்போடு பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் தமிழகத்தில் உயிர் காக்கும் மருந்துகள் உள்ளதால் கொரோனா குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை
அரசு வழங்கும் ஆலோசனைப்படி நாம் அனைவரும் நடந்து கொண்டால் இந்த நோய் தொற்றிலிருந்து விடுபடலாம் , இ-பாஸ் பெறுவது குறித்து குறைகளை சுட்டி காட்டினால் சரி செய்து கொடுக்கிறோம் என்று கூறினார்.
அருகில் அதிமுக மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர் , சுகாதாரத்துறை அதிகாரி வர்கீஸ் , மண்டல உதவி ஆணையர் பால் தங்கதுரை , காவல்துறை உதவி ஆணையர் ஆதிமூலம் , மருத்துவர்கள் மாலதி, இளஞ்செழியன் , பகுதி செயலாளர் கே.கிருஷ்ணன் , டி.என்.செல்வம் , ஆர்.மணிக்குமார் , எம்.சின்னா , மகாலிங்கம் , பூங்கா மணி , ரமணகுமார் , லயன் ஆர்.வீரகுமார் உட்பட அதிமுகவினர் பலர் இருந்தனர்.