தமிழக முதல்வர் , துணை முதல்வர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி
சென்னை 2வது மண்டலம் 15வது வார்டுக்கு உட்பட்ட மணலி புதுநகரில் மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் கள பணியாளர்களிடம் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மேற்கு அதிமுக மாவட்ட செயலாளர் சிறுனியம் பி.பலராமன் , திருவள்ளூர் கிழக்கு அதிமுக மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர் ஆகியோர் கலந்துகொண்டு களப் பணியாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி மருத்துவ உபகரணங்கள் கபசுர பொடி சத்து மாத்திரைகள் ஆகியவற்றை வழங்கினார்கள்.
இதைத்தொடர்ந்து அதன் அருகே கொரோனா நோய் தொற்று தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் திருவள்ளூர் மேற்கு அதிமுக மாவட்டச் செயலாளர் சிறுனியம் பி.பலராமன் , திருவள்ளூர் கிழக்கு அதிமுக மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர் ஆகியோர் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் முக கவசம் ஆகியவற்றை வழங்கினார்.
அப்போது மருத்துவர்கள் பொதுமக்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்தனர்.
அருகில் பகுதி செயலாளர் கே.கிருஷ்ணன் , டி.என்.செல்வம் , எம்.சின்னா , மணலி முல்லைை ராஜேஷ் , பூங்கா மணி , ரமண குமார் , எம்.சி.சூர்யா மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் , காவல்துறை அதிகாரிகள் உட்பட அதிமுக மாவட்ட பகுதி வட்ட நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.