சென்னையில் மீண்டும் ஊரடங்கு நீடிக்கப்பட மாட்டாது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்..

PUBLISHED:11-Jun-2020

சென்னை  

சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவதை மற்றும் சுத்தமாக இருப்பதை மக்கள் இயக்கமாக மாற்றுவதுதான் நம்முடைய நோக்கம் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சர்கள் ஜெயகுமார், காமராஜ், கே.பி. அன்பழகன், ஆர்.பி. உதயகுமார் பாண்டியராஜன், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருவொற்றியூர் மண்டலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேற்று துாய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார், இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

கடவுளின் அவதாரங்களாக இருக்கும் துாய்மைப்பணியாளர்கள் இன்றைக்கு நம் கண்முன் காட்சியளிக்கிறார்கள்.  அவர்களுக்கு  நலத்திட்டங்களை வழங்குவது ஊக்கத்தை அளிப்பதற்காக தான் , துாய்மைப்பணியாளர்களுக்கு தலைவணங்குகிறோம்.கொரோனா நோய்த்தொற்று என்பது கிட்டதட்ட 220 நாடுகளை உலக வரலாறு காணாத அளவுக்கு அச்சுறுத்தி வருகிறது.

திருவொற்றியூர் மண்டலத்தில் கிட்டதட்ட 3 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள்.

இந்த மண்டலத்தில் களத்தில் உள்ள ஆவின் மேலாண் இயக்குனர் காமராஜ் சிறப்பான முறையில்  பணியாற்றி வருகிறார், திருவொற்றியூர் மண்டலத்தைநோய்த்தொற்றில்லாத மண்டலமாக மாற்ற வேண்டும் என்றும் தமிழகத்தில்முதன்மை மண்டலமாக  மாற்ற வேண்டும் என்று ஐஏஎஸ் அதிகாரி காமராஜ் சிறப்பாகசெயல்பட்டு வருகிறார்.

நம்முடைய இலக்கு. இந்த விழிப்புணர்வு பணியை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்பதாகும்,  அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். இதையொரு முழக்கமாக்க வேண்டும்,  சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். அதை மக்கள் இயக்கமாக மாற்றுவது தான் நம்முடைய நோக்கம்.

பொதுவிநியோகத்தில் மீன் வாங்க செல்லும் இடங்களில் பல சரக்கு வாங்கும் இடங்களில் நாம் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.

சமூக இடைவெளியுடன் பொருட்கள் வாங்குவதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.

இந்தியாவிலேயே 29 மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முதலமைச்சர்  தமிழகத்தை முன்னோடி மாநிலமாக  நிவாரணத்தொகையாக  மக்கள் வாழ்வாதாரத்திற்காக ரூ 33 80 கோடி வழங்கி பசி பட்டினியை தடுத்திருக்கிறார். 

அம்மா உணவகங்கள் மூலம் 7 லட்சம் மக்களுக்கு உணவு வழங்கி மக்களை காக்கும் மகத்தான பணியை மேற்கொண்டிருக்கிறார்.

சென்னையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படாது என்று  ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெளிவுப்படுத்தி விட்டார், சென்னையை பொறுத்தவரை 144 தடை உத்தரவு இன்னமும் இருக்கிறது,

நோய்த்தொற்றை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, தடை உத்தரவு இன்னமும் இருக்கிறது இருப்பினும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும்  மீட்பு பணிகளுக்கு இடையில் தளர்வுகள் மேற்கொண்டு விழிப்புணர்வு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அதில் நாம் நல்லதொரு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது,

இந்த ஊரடங்கு நேரத்திலும் மக்களை காக்கும் நடவடிக்கைகளை தேவையான நேரத்தில்தேவையான நடவடிக்கைகளை முதல்வர்  மேற்கொண்டு வருகிறார்.

அதற்கு பத்தாம்வகுப்பு மாணவர்களுக்கான ஆல்பாஸ் அறிவிப்பு  சரியான முன் உதாரணமாகும். அது மக்களின் எதிர்ப்பார்ப்புக்களுக்கேற்பு மக்களின் உணர்வுகளை நிறைவேற்றுகிறஅரசு என்பதை மக்களுக்கு உணர்த்தியிருக்கிறது.

முதல்வர்  24 மணிநேரத்திற்கு உழைத்து கொண்டிருப்பவர்.  ஆய்வில் ஈடுபட்டு மக்களின் உணர்வுகளை உள்வாங்கிக்கொண்டிருப்பவர் என்பதற்கு சான்றிதழாக அமைந்திருக்கிறது. முதல்வர்  வெளியிட்ட அறிவிப்பு அமைந்திருக்கிறது,  இதன் மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாணவர்களுக்கு புதிய நம்பிக்கை யை ஏற்படுத்தி இருக்கிறது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
Recommended For You
Alert: You are not allowed to copy content or view source