" கலைஞரின் சாதனைகள் என்றும் மறையாது " ஜெ.யுவராஜ் வாழ்த்து..!
மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும் தி.மு.க.வின் தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞரின் 97வது பிறந்த நாளான (இன்று) ஜூன் 3-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க.வினர் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து கலைஞரின் பிறந்தநாளுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகள் கூறி வரும் நிலையில் மக்கள் சேவை இயக்கத்தின் நிறுவனர் ஜெ.யுவராஜ் கலைஞருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உண்மையான தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் 97வது பிறந்தநாள் இன்று.
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் சாதனை என்றும் மறையாது.
இவ்வாறு மக்கள் சேவை இயக்கத்தின் நிறுவன தலைவர் ஜெ.யுவராஜ் தெரிவித்தார்.
அவருடன் இயக்கத்தின் துணைத் தலைவர் ஜான் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.