தமிழகத்தில் நோற்று ஒரே நாளில் ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.!

PUBLISHED:31-May-2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நேற்று 938 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால் மொத்த எண்ணிக்கை 21,184 ஆக அதிகரித்தது.

இந்நிலையில் இன்று 1149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் மொத்த எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது.

ஒரு நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும். 

இன்று ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்தனர்.

இதனால் பலியானோர்களின் மொத்த எண்ணிக்கை 173 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரு நாளில் 757 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனால் இதுவரை 12,757 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மொத்த எண்ணிக்கை 14,802 ஆக உயர்ந்துள்ளது.
Recommended For You
Alert: You are not allowed to copy content or view source