திருவெற்றியூரில் 500 குடும்பங்களுக்கு அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன் 5 கிலோ அரிசி மூட்டை

PUBLISHED:13-May-2020

சென்னை:-

திருவெற்றியூரில் 500 குடும்பங்களுக்கு அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.குப்பன் 5 கிலோ அரிசி மூட்டை வழங்கினார்.

தமிழ்நாடு முழுவதும் கொரானா நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவு மே 17ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டது.

சென்னை திருவெற்றியூர் மேற்கு மாட வீதி பகுதியில் வசிக்கும் 500 குடும்பளுக்கு  5 கிலோ அரிசி மூட்டையை அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன் , தொழில் அதிபர் கே.கார்த்திக் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சிக்கு அதிமுக நிர்வாகிகள் இ.வேலாயுதம் ,  எஸ்.பி.புகழேந்தி , போட்டோ செந்தில் , கே.லெனின் , ஆகியோர் உடன் இருந்தனர்.
Recommended For You
Alert: You are not allowed to copy content or view source