மது கடை திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விடுங்கள் - நடிகர் ரஜினிகாந்த் அதிரடி

PUBLISHED:10-May-2020

சென்னை:

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து தமிழகத்தில் செயல்பட்டு வந்த அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டது. 

டாஸ்மாக்கை மூடியதால் அரசுக்கு வருமானம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறி சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

டாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டிற்கு மக்கள் , அரசியல் கட்சியின் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் டாஸ்மாக் தொடர்பாக தமிழக அரசின் நிலைபாட்டை விமர்சித்து நடிகர் ரஜினி காந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

டாஸ்மாக்கை அரசு திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறுந்து விடுங்கள் என ரஜினி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், '' இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும்.

தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள்’’ என தெரிவித்துள்ளார்.
Recommended For You
Alert: You are not allowed to copy content or view source