ஆதார் மையத்தின் ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை..!

PUBLISHED:13-Feb-2021

திருக்கனூர் கிராம பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தில் இயங்கிவந்த ஆதார் சேவை மையத்தில் கடந்த 11ஆம் தேதி வியாழன்கிழமை திருடர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று ஆதார் சேவை மைய அலுவலகத்தில் இருந்த மடிக்கணினிகளை திருடி சென்றுள்ளனர்.

இதுசம்பந்தமாக ஆதார் சேவை மைய நிர்வாகி திருக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் திருக்கனூர் காவல் நிலைய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருக்கனூர் கிராம பஞ்சாயத்து கட்டிடத்தில் நடைபெற்ற மடிக்கணினி திருட்டில் சம்பந்தப்பட்ட நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த திருட்டு சம்பவத்தால் சுமார் 15 நாட்கள் ஆதார் சேவைகள் பொது மக்களுக்கு கிடைப்பது தடைபடும் என்று ஆதார் சேவை மையத்தினர் தெரிவித்தனர்.
Recommended For You
Alert: You are not allowed to copy content or view source