புதுவை மாநிலம் நெட்டப்பாக்கம் தொகுதியில் உள்ள சூரமங்கலம் மேட்டு தெரு பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி தலைவர் தமிழ்செல்வி கலந்துகொண்டு கடந்த மாதம் பெய்த கனமழையால் சேதமடைந்த கூரை வீடுகளுக்கு தார்ப்பாய் மற்றும் போர்வை ஆகியவற்றை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நெட்டப்பாக்கம் தொகுதி சூரமங்கலம் பகுதி செயல்வீரர் R.முனியப்பன் செய்திருந்தார்.
அருகில் ஏராளமான பிஜேபி கட்சி நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் என பலர் இருந்தனர்.