PUBLICNEWSTV-நாம் எந்த திசையில் தலைவைத்து படுத்து உறங்க வேண்டும்...!

PUBLISHED:25-Nov-2018

ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரிய கருத்துக்களையும் நம் மூதாதையர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

அவற்றில் ஒன்று தான் நாம் தூங்கும் திசையில் எது உகந்த திசை என்பதாகும்.

தொன்று தொட்டு நம் மூதாதையர்கள் பல சம்பிரதாயங்களைச் சொல்லி வைத்திருக்கின்றார்கள்.

ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரிய கருத்துக்களையும் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். 

அவற்றில் ஒன்று தான் நாம் தூங்கும் திசையில் எது உகந்த திசை என்பதாகும்.

பொதுவாக வடக்கிலே தலைவைத்துப் படுத்தால், வம்சம் விருத்தியடையாது என்பார்கள். 

ஆனால் வடக்கிலே வாழை குலை தள்ளினால், வம்ச விருத்தி ஏற்படும். வாரிசு இல்லாத வீட்டில் வாரிசு உருவாக வழிபிறக்கும்.

தெற்கில் தலை வைப்பதும் அவ்வளவு நல்லதல்ல. 

கிழக்கு மற்றும் மேற்கு திசைகள் தான், தலைவைத்துப் படுத்துத் தூங்குவதற்கு ஏற்ற திசையாக ஆன்றோர்கள் சொல்லி வைத்திருக்கின்றனர். 

எல்லாவற்றுக்கும் மேலாக கிழக்குப் பக்கம் பார்த்து தலை வைத்துத் தூங்குவதே கீர்த்தியைத் தரும்.

காரணம் ராஜ கிரகமான சூரியன் உதிப்பது அந்த திசையில் தான்.




Recommended For You
Alert: You are not allowed to copy content or view source