PUBLICNEWSTV-பிரதமர் மோடி வெளிநாடு சுற்று பயணம் செலவு ரூ.1,484 கோடி!?.

PUBLISHED:20-Jul-2018

புதுடில்லி :

பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு ரூ.1,484 கோடி செலவிடப்பட்டிருப்பதாகவும், இதுவரை அவர் 84 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ராஜ்யசபாவில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிரதமராக மோடி பதவியேற்ற 2014 ஜூன் 15 முதல் 2018 ஜூன் 10 வரையிலான காலகட்டத்தில், 42 முறை வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், 84 நாடுகளுக்கு சென்றுள்ளார். 2015 - 16ம் ஆண்டில் 24 நாடுகள், 2016 - 17ம் ஆண்டில் 18 நாடுகள், 2017 - 18ம் ஆண்டில் 19 நாடுகளுக்கு மோடி சென்றுள்ளார்




Recommended For You
Alert: You are not allowed to copy content or view source