PUBLIC NEWS TV - பாகிஸ்தானில் 9 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு அடைந்துள்ளனர்..!

PUBLISHED:20-Sep-2019


இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டில் இதுவரை சுமார் 9 ஆயிரத்து 634 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தெற்கு சிந்து மாகாணத்தில் 2 ஆயிரத்து 132 பேரும், கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் 2 ஆயிரத்து 816 பேர்ரும், பலூசிஸ்தானில் ஆயிரத்து 772 பேரும், கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஆயிரத்து 612 பேரும், தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஆயிரத்து 210 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

மேலும், இதுவரை, பாகிஸ்தானில் இந்த ஆண்டில் மட்டும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், சிந்து மாகாணத்தில் 8 பேரும், இஸ்லாமாபாத், பலூசிஸ்தானில் தலா 3 பேர், பஞ்சாப்பில் 2 பேர் என மொத்தம் 16  பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.




Recommended For You
Alert: You are not allowed to copy content or view source