PublicNewsTv- மெர்சல் திரை படத்தைக் கேரளாவில் வெளியிட திரையரங்குகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

PUBLISHED:10-Oct-2017

கேரளாவில் விஜய் நடித்த பைரவா திரை  படம் உண்டாக்கிய நஷ்டத்தால் அடுத்து வெளிவரவுள்ள மெர்சல் படத்துக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரை படம் - மெர்சல். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் நூறாவது தயாரிப்பாக உருவாகி வரும் இப்படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இசை - ஏ.ஆர்.ரஹ்மான். மெர்சல் படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதையடுத்து திரை படம் தீபாவளிக்கு வெளிவரும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ள கேரளாவில் மெர்சல் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

விஜய்யின் முந்தைய படமான பைரவா கேரளாவில் வெளியானபோது அதை வெளியிட்ட விநியோகஸ்தருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பைரவா படத்தால் உண்டான நஷ்டத்தை விஜய் தரப்பு ஈடுகட்டவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. எஃப்டிஏ எனப்படுகிற கேரளாவில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், மெர்சல் படத்தைக் கேரளாவில் வெளியிடவேண்டாம் என கேரளத் திரையரங்குகளுக்கு கட்டளையிட்டுள்ளது. பைரவா படத்தினால் உண்டான நஷ்டத்தைத் திருப்பித் தந்தால் மட்டுமே மெர்சல் கேரளாவில் வெளியிடப்படும் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. 

மெர்சல் படத்தை குளோபல் யுனைடெட் மீடியா என்கிற நிறுவனம் கேரளாவில் வெளியிடுகிறது. தங்களுக்கும் பைரவா படத்தினால் உண்டான நஷ்டத்துக்கும் எவ்விதச் சம்பந்தம் இல்லை. எனவே மெர்சல் படத்தைக் கேரளாவில் வெளியிடத் தடை போடக்கூடாது என்று விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கு அந்த நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. 

கேரளாவில் 250 திரையரங்குகளில் மெர்சல் வெளியாகவுள்ள நிலையில் இந்தத் திடீர் தடங்கல் கேரள விஜய் ரசிகர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரம் விரைவில் தீர்க்கப்படவேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.




Recommended For You
Alert: You are not allowed to copy content or view source