PUBLIC NEWS TV-ஓசூரில் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு ,950 ஏழைகளுக்கு வேட்டி சேலை வழங்கினர்.

PUBLISHED:09-Jun-2018

ஓசூரில் திமுக தலைவர் கலைஞர் பிறந்த நாள் விழா ,950 ஏழைகளுக்கு வேட்டி சேலை  வழங்கினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்   நகர திமுக சார்பில் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் 95வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது , இவ்விழாவில் ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் 95வதுபிறந்த நாள் விழா கடந்த 3ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது
அதன் ஒரு பகுதியாக ஓசூரில்  ராம்நகர் அண்ணா சிலை முன் விழா நடைபெற்றது

ஓசூர் நகர திமுக செயலாளர் மாதேஸ்வரன் தலைமையில் நடைப்பெற்ற விழாவில் 950 பேருக்கு இலவச வேட்டி சேலை மற்றும் பிளாஸ்டிக் குடம் வழங்கப்பட்டது , இவ்விழாவில் சிறப்பு அழைப்பராக கழக பேச்சாளர் சபாபதி மோகன் கலந்து கொண்டு கலைஞர் அவர்களின் சாதனைகளை பாரட்டி  வாழ்த்துரை வழங்கினார்.

மேலும் இவ்விழாவில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும்  ஏராளமானோர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.




Recommended For You
Alert: You are not allowed to copy content or view source